
இன்பமும் ஓர்கணத் தோற்றம் - இங்கு 
இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம் 
துன்பமும் ஓர்கணத் தோற்றம் - இங்குத் 
தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்.
தோன்றி அழிவது வாழ்கை - இதில் 
துன்பத்தோடு இன்பம் வெறுமை என்றோதும் 
மூன்றில் எது வருமேனும் - களி
மூழ்கி நடத்தல் பரமசிவ முக்தி.
பாரதியார் 
(p.475 in my book)
 
 
No comments:
Post a Comment